Lord Siva

Lord Siva

Thursday 16 February 2012

Depression – தெரிந்து கொள்ள வேண்டியது

Depression குறித்து நாம் நிறை ய தெரிந்துகொள்ள வேண்டியு ள்ளது.
குழந்தைகளுக்கு கவலை எப்படி ஏற்படுகிறது?
குறிப்பாக இரண்டு சூழல்களில் தான் குழந்தைகள் கவலைக்கு ஆளாகிறார்கள்:
ஒன்று: தன் முயற்சியில் தோல்வி அடைந்திடும் போது.
ஒரு காரியத்தில் இறங்குகிறான் ஒரு சிறுவன். அதில் தோல்வி அடைகின்றான். அல்லது ஒன்றை அடைந்திட முயற்சி செய்கின் றான். அது அவனுக்கு கிட் டிடவில்லை. அடுத்து என் ன செய்தால் தான் நினைத் தது கைகூடும் என்று அவ னுக்குத் தெரியவில்லை. தான் எதற்கும் இலாயக்கி ல்லை என்று எண்ணத் தொடங்குகிறான். அப்போ து தான் அவனை கவலை தொற்றிக் கொள்கிறது!
இரண்டு: மற்றவர்களோடு பழகுவது எப்படி என்பது புரியாத போது.
கவலைக்கு இன்னொரு காரணம் அவன் மற்றவர்களோடு பழகும் போது ஏற்படுகின்றது. ஏதோ ஒரு தேவைக்காக மற்ற ஒருவனை அணுகுகின்றான். அதை அவன் மறு த்து விடுகின்றான். இவன் அவனை விட்டு விலகிவிடுகின் றான். தொ டர்பை முறித்துக்கொ ள்கின்றான். மறு படி அவன் வந்து “சமாதானம்” பேசினாலும் அதனை இவன் ஏற் பதில்லை. அவன் எதிரே வந்தாலும் தலையைத் திருப்பிக் கொண்டு விலகிச் சென்று விடுகின் றான். இப்படியாக அவன் தன்னைத் தனி மைப் படுத்திக் கொள்கின்றான்.
விளைவு: கவலை!!!
இப்படிப்பட்ட இரண்டு சூழ்நிலைகளில் இருந்தும் இத்தகைய சிறு வர்களைக் காப்பாற்றிட வேண்டியது யார் பொறு ப்பு?
பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு இதில் நீங்காப் பொறுப்பு இருக்கிறது என்கி றார்கள் வல்லுனர்கள்.
சோக வயப்பட்ட குழந்தைகள் – படிப்பில் கவனம் செலுத்திட இய லாது! இப்படிப்பட்ட குழந்தைகள் பள்ளியிலிருந்து இடையிலேயே நின்று விடும் நிலையும் (drop out) ஏற்பட்டு விடுகிறது.
எனவே–ஆசிரியர்கள் அன்றாடம் நடத்துகின்ற பாடங்களோடு சேர் த்து–தோல்வியைச் சந்திப்பது எப்படி என்றும், அடுத்தவர் உணர் வுகளைப் புரிந்து கொண்டு நடப்ப து எப்படி என்றும் குழந்தைகளு க்குச் சொல்லிக் கொடுத்திட வே ண்டும். (மேலை நாடுகளில் சில பள்ளிகளில் இவ்வாறு சொல்லிக் கொடுக்கத் தொடங்கி விட்ட னர்).
அடுத்து பெற்றோர்கள்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விஷயத்தில் அலட்சியம் காட் டினால்? தந்தை எப்போதும் வேலை வேலை என்று தனது தொழி லில் பிஸியாக இருந்து விட்டா ல்? தாய்க்கு தன் பிள்ளைகளை ப் புரிந்து கொள்ளத் தெரியவில் லை என்றால்? கணவனும் ம னைவியும் பிரிந்து வாழ்ந்தால்? கணவனும் மனைவியும் அடி க்கடி சண் டையிட்டுக்கொண்டி ருந்தால்……..? என்னவாகும் குழந்தை கள்?
குழந்தைகளின் கவலைகளை நீக்கிடப் போதுமான விழிப்புணர்வு இன்னும் ஏற்படாத காரணத் தினால் தான் உலக அளவில், சோகத் துக்கு ஆளாகின்ற குழந்தை களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றதாம். இத ற்கு வழி ஒன்றை நாம் கண்டே ஆக வேண்டு ம் தானே!
குழந்தைகளின் கவலைகளைப் போக்கிட இஸ்லாம் என்ன தீர்வு தருகின்றது?
ஒன்று:
மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்வை இறை வன் கற்றுத் தருகின்றா ன். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருந்திட வேண்டும் எனில் பெற்ற வர்கள் முதலில் மகிழ்ச்சியாக இருந்திட வேண்டும்.
இரண்டு:
போதும் என்ற மனப்பான்மையுடன் வாழ்ந்திடக் கற்றுத் தருகின்றான் இறைவன். பொருள்களை வாங்கி வாங்கிக் குவிப்பதில் மகிழ்ச்சி இல் லை என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண் டும். குழந்தைகளுக்குப் புரிய வைத்திட வேண்டும்.
மூன்று:
மற்றவர்களுடன் மகிழ்ச்சியோடு பழகு வது எப்படி என்று கற்றுத் தருகின்றான் இறைவன். சிரித்த முகத்தோடு அணுகுவது, கை குலுக்குவது, சலா ம் சொல்வது, அன்பளிப்புகளைப் பகிர்ந்து கொள்வது, மற்றவர்க ளுக்கு முன்னுரிமை தருவது, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, மன்னிக்கும் மனப்பான்மை, வீ ணான சந்தேகங்களைத் தவிர்த் தல், கோள் சொல்லாமை, மற்ற வர்க்கு உதவி செய்தல் மற் றும் வாழ்த்துக்கள் – இப்படி அடுக் கிக் கொண்டே போக லாம்.
மற்றவர்களோடு பழகுவது எப்படி என்பதை குழந்தைகளுக்கு பெற் றோர் கற்றுத் தந்திட வேண்டும். பெற்றோர்களின் முன்மாதிரியை அப்படியே பின்பற்றுவார்கள் என்பதால், பெற்றோர்கள் மற்றவர்க ளுடன் இனிமையாகப் பழகுவதை வழக்கமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும் அதற்கு த்தக்க நடந்து கொள்வது எப்படி என்பதையும் பெற் றோர்கள் குழ ந்தைகளுக்குப் புரிய வைத்திட வேண்டும்.
குழந்தைகள் கவலை தோய் ந்தவர்களாக ஆவதிலிருந்து காப்பதே சாலச் சிறந்தது. ஏனெனில் ஒரு முறை அவர் கள் சோக வயப்பட்டு விட் டால், காலம் முழுவதும் அது தொடருமாம்!
குழந்தைகளை மகிழ்ச்சியுடன் வைத்திருத்தல் சமூகக் கடமை. ஏனெனில் அவர்களே எதிர்கால சமூகத்தின் மகிழ்ச்சிக்கு காரணமா க இருக்கப் போகிறவர்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது!

No comments:

Post a Comment