Lord Siva

Lord Siva

Tuesday 29 November 2011

“ஹெர்னியா’ ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம்


Posted On November 29,2011,By Muthukumar
அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஒருவர், ஐந்து முதல் ஏழு நாட்களுக்குப் பின் மறுபடி வேலைக்குச் செல்லலாம். ஆனால், இது அந்த நோயாளியின் உடல்கூறு எப்படிப்பட்டது என்பதையும், அவருக்கு இருந்த குடலிறக்கத்தின் அளவையும் பொறுத்தே இருக்கும்.
" ஏய்... எனக்கு, "ஹிரண்யா' வந்திருக்காம்ப்பா... அடி வயித்த வலிக்குதுன்னு, டாக்டர்ட்ட போனா, அவர், எனக்கு, "ஹிரண்யா' ஏற்பட்டிருக்குன்னு சொல்றார். சர்ஜரி செய்யணுமாம்...' என, பக்கத்து வீட்டுப் பெண், வெலவெலத்துப் போய், உங்களிடம் "துக்கத்தை'ப் பகிர்ந்து கொண்டிருப்பாரே? அவரிடம், அது, "ஹிரண்யா' இல்லம்மா... "ஹெர்னியா' எனச் சொல்லி, திருத்தினீர்களா? திருத்தவில்லை எனில், உங்களுக்கும் அது குறித்துத் தெரியவில்லை எனப் பொருள். குடல் சிகிச்சை நிபுணர் டாக்டர் விக்ரம், "ஹெர்னியா' பற்றிச் சொல்கிறார். படியுங்கள்:
குடலிறக்கம் (ஹெர்னியா) என்றால் என்ன?: வயிற்றுப் பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து, வலுவிழந்து இருக்கும். அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே, சிறுகுடல் பிதுக்கிக் கொண்டு அல்லது துருத்திக் கொண்டு இறங்கி விடும். இதைத்தான், "ஹெர்னியா' அதாவது, குடலிறக்கம் என்று கூறுகிறோம்.
இந்த குறைபாடு ஏன் ஏற்படுகிறது?: வயிற்றுப் பகுதி வலுவிழப்பது இயற்கை தான். ஆண்களுக்கு, அவர்களின் இடுப்புக்கு கீழ், அதாவது, அரைப்பகுதியில் (எணூணிடிண ச்ணூஞுச்) சிறுநீர் வெளியேறும் பகுதியை அடுத்து, விரைக்காய்கள் இருக்கும். அவை வயிற்றின் உட்பகுதியில் தொடங்கி, வெளியே நீண்டு தொங்குகின்றன. அந்த பாதையில் குடல் இறங்கு�® �து தான், "ஹெர்னியா!' சில நேரங்களில், அந்த பகுதி வலுவிழக்க நேரிடும். தொப்புள் பகுதியும் வலுவிழந்து விடுகிற பகுதி. இவற்றின் வழியாக, குடலிறக்கம் ஏற்படுகிறது.
பெண்களுக்கு எந்த வகை குடலிறக்கம் இயற்கையாகக் காணப்படுகிறது? ஏன்?: பெண்களுக்கு, வயிற்றுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டால், குடலிறக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகம். "சிசேரியன்' அறுவைச் சிகிச்சை எனப்படும், பேறுகால அறுவைச் சிகிச்சைகள் மற்றும் கர்ப்பப்பை நீக்கும் அறுவைச் சிகிச்சைகளுக்குப் பின், குடலிறக்கமà � ஏற்படுகிறது. பெண்களுக்கு, வயது ஏற ஏற, எடை கூடுவது இயற்கை. இப்படி எடை கூடுவது வயிற்றுப் பகுதியை பலவீனமாக்குகிறது. கருவுற்றிருக்கும் காலத்தில், மாதம் ஆக, ஆக, வயிறு விரிவடைகிறது. இதுவும் வயிற்றுப் பகுதியை பலவீனமாக்கி, வலுவிழக்கச் செய்கிறது. பெண்களிடையே தொப்புள் கொடிப்பகுதி வழியே ஏற்படும் குடலிறக்கம் வெகு சாதாரணமாகக் காணப்படுகிறது.
ஒருவர் இயற்கைக் கடன்களைக் கழிக்கும்போது, அளவுக்கதிகமாக (முக்குதல்) சிரமப்படுதல், சிறுநீர் கழிக்கும்போது எளிதாகச் செல்லாமல், துன்பப்படுதல் ஆகியவை எவ்வாறு குடலிறக்கத்துக்கு காரணமாகின்றன?: இயற்கைக் கடன்களைக் கழிக்கும்போது, ஒருவர் எந்த வகையில் சிரமப்பட்டாலும், அதன் காரணமாகக் குடலிறக்கம் ஏற்படும். ஆண்கள் முதுமையடையும் காலத்தில், "புரோஸ்டேட்' சுரப்பிகள் வீங்கிப் பெரிதாகின்றன. அவைதான் சிறுநீர் கழிப்பதற்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன. அந்த சிரமமே ஒருவருக்குக் குடலிறக்கம் ஏற்பட வழிவகுக்கிறது. இது போலவே, இயற்கைக் கடன்கழிக்க ஏற்படும் சிரமத்தாலும், இதே விளைவு தான் ஏற்படுகிறது.
ஒருவர் அதிகமான அளவிற்கு இருமுவதாலும், குடலிறக்கம் ஏற்படக்கூடுமா?: இருமல் வரும்போது, வயிற்றுக்குள் ஏற்படும் அழுத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. எனவே, இருமலினாலும் குடலிறக்கம் ஏற்படுகிறது.
பளு தூக்குதல், அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குதலால் குடலிறக்கம் ஏற்படுகிறதா?: பளுதூக்குதல் மற்றும் அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குவதால் குடலிறக்கம் ஏற்படுகிறது என்று உறுதிப்படுத்துவதற்கு, இது வரையில் சான்றுகள்(ஆதாரங்கள்) ஏதுமில்லை.
சிறிய அளவிலான குடலிறக்கத்திற்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறதா?: சிறிய குடலிறக்கம் காரணமாக, பெருங்குடல் வழி வெளியேறும் கழிவுப் பொருட்கள், நகராமல் நின்று அடைத்துக் கொள்வதற்கு, அதிக வாய்ப்பு உள்ளது. அப்போது, இது ஒரு நெருக்கடியான நிலைமையை ஏற்படுத்துகிறது. இதை, அந்த சமயத்தில் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்து அகற்றாவிட்டால், அது இன்னும் பெரிய அளவிற்குச் சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.
குடலிறக்கத்தைச் சரி செய்வதற்கான சிறந்த வழி எது?: சிறிய துவாரங்கள் உடைய வலை போன்ற பொருளை (மெஷ்), இறங்கிய குடலைத் தூக்கிப் பிடித்துத் தாங்கிக் கொள்வதற்குப் பயன்படுத்தலாம். அப்படிப் பயன்படுத்தும் அந்தப்பொருள் (மெஷ்), குடலிறக்கம் மீண்டும் ஏற்படாமல் தடுக்கிறது. இது, திசுக்களின் மீது நிலையாகப் பொருந்தி அந்தப் பகுதிக்கு வலுவூட்டும். மிகச் சிலருக்கு நோய் தொற்று ஏற்பட லாமà � . "மெஷ்' சுருண்டு விடலாம். இவற்றை, உடனுக்குடன் சரிசெய்ய வேண்டும்.
ஒருவர் அறுவை சிகிச்சை முடிந்து எத்தனை நாட்கள் கழிந்தபின் மீண்டும் வேலைக்குச் செல்ல முடியும்?: அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட ஒருவர், ஐந்து முதல் ஏழு நாட்களுக்குப் பின் மறுபடி வேலைக்குச் செல்லலாம். ஆனால், இது அந்த நோயாளியின் உடல்கூறு எப்படிப்பட்டது என்பதையும், அவருக்கு இருந்த குடலிறக்கத்தின் அளவையும் பொறுத் தே இருக்கும். "லாப்பரோஸ்கோப்' மூலமாகவும், குடலிறக்கத்தை சரி செய்ய முடியும்.
குடலிறக்கத்தைச் சீர் செய்யும் பழைய முறைகள் சிறந்தவையா? என்னென்ன முறைகள்?: இதற்குக் கையாளப்படும் பழைய முறைகள், 150 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழக்கத்தில் இருந்து வந்துள்ளன. அவை, மிகவும் சிறந்தவையே. அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கைகள்:
  1. *இயன்ற வரை அதிகம் நடக்க வேண்டும்.
  2. *வழக்கமாக எந்த அளவுக்கு எடை தூக்கி வந்தாரோ, அந்த அளவு எடையைத் தூக்கலாம்.
  3. *நோயாளி மாடிப்படிகளில் ஏறி இறங்கலாம்.
  4. * குத்துக்காலிட்டு உட்காரும், இந்திய வகைக் கழிப்பிடத்தைப் பயன்படுத்தலாம். இவற்றால் எல்லாம் குடலிறக்கம் ஒரு போதும் மீண்டும் ஏற்படாது.

No comments:

Post a Comment