Posted on November 29, 2011 by muthukumar
கடந்த 1964 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.,
க்களி ன் சம்பளம் 250 ரூபாயாக மட் டுமே இருந்து வந்தது. இடையி ல், 1971-ல்
ஈட்டுப்படியாக 100 ரூபாயும், 1974-ல் ஈட்டுப்படி 200 ரூபாயாகவும், 1978-ல்
இது 350 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. அதே போல, தொலைபேசிப் படி என்று 150
ரூபாய் 1978 முதல் வழ ங்கப்பட்டது. இந்த தொலை பேசி ப்படி, 1980-ல் 200
ரூபாயாக உயர் த்தப்பட்டது. இதனால், 1980 ஆம் ஆண்டு, மொத்தமாக 800 ரூபாய் எம். எல்.ஏ.,க்கள் பெற்று வந் தனர்.
கடந்த 1981-ல், ஈட்டுப்படி 400 ரூபாயாகவும், தொலைபேசிப் படி 300
ரூபாயாகவும்
உய ர்த்தப்பட்டது. 1982-ல், சம்பளம் 300 ரூபாயாகவும், தொலைபேசிப் படி 350
ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. 1985-ல் சம்பளம் 500 ரூபாயாக
உயர்த்தப்பட்டது. 1985-ல் ஆண்டில், சம்பளம் 600 ரூபாயா கவும், ஈட்டுப்படி
500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. கடந்த 1987-ல்,
தொலைபேசிப்
படி 450 ரூபாயாக உயர்த் தப்பட்டது. இதன்பின், 1989-ல், ஈட்டுப்படி 700
ரூபாயாக உயர்த்தப்பட்டு, மொத்த சம் பளம் 1750 ரூபாயா க இருந்தது.
இந்நிலையில்,
1990-ல் சம்பளம் 1000 ரூபாயாகவும், ஈட்டுப்படி 800 ரூபாயாக வும்,
தொலைபேசிப் படி 700 ரூபாயாகவு ம் உயர்த்தப்பட்டது. 1991-ல், புதிதாக
தொகுதிப்படி என்று உருவாக்கப்பட்டு, 250 ரூபாய் சேர்த்து வழங்கப் பட்டது.
கடந்த 1992-ல், தொலைபேசிப் படி 800 ரூபாயக உயர்த்தப்பட்டது. இந்நிலையில்,
1993-ல், சம்பளம் 1250 ரூபாயாக உயர் த்தப்பட்டு, புதிதாக தபால் படி என்று
250 ரூபாய் சேர்த்து வழங்கப்பட்ட து. இதன்பின், 1994-ல், சம்பளம் 1500 ரூபா
யாகவும், ஈட்டுப்படி 1000 ரூபா யாகவும், தொகுதிப்படி 300 ரூபாயாகவும்
உயர்த்தப்பட்டு, மொத்த சம்ப ளம் 3950 ஆக உயர்ந்தது.
2007
ஏப்ரலில் புதிதாக வாகனப்படி என்று ஒன்று உருவாக்கப்பட்டு, 5000 ரூபாய்
கூடுதலாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, 2008-ல், 12 ஆண்டுகளுக் குப் பின்,
சம்பளம் 3000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அத்துடன், ஈட்டுப்படி
7000
ரூபாயாகவும், தொகுதிப்படி 5000 ரூபாயாகவும், தபால் படி 2500 ரூபாயா கவும்,
தொலைபேசிப் படி 5000 ரூபாயா கவும் உயர்த்தப்பட்டு மொத்த சம்பளம் 30 ஆயிரம்
ரூபாயனது.
இதன்பின், வாகனப்படி 20 ஆயிரம்
ரூபா யாக உயர்த்தப்பட்டது. 2010 முதல், எம். எல்.ஏ.,க்களின் மொத்த சம்பளம்
50 ஆயிரம் ரூபாயானது. அதாவது, 2006-ல் ஆட்சி அமைந்த போது, மொத்த சம்பளமாக
16 ஆயிரம் ரூபாய் பெற்று வந்த எம்.எல்.ஏ.,க்கள், ஆட்சி முடி
யும் நிலையில், மூன்று மடங்குக்கு மே ல் உயர்த்தப் பட்டது.
2011ல் பெரும்பான்மையுடன் ஆட்சி
அமைத்தது அ.தி.மு.க., இதை யடுத்து 14செப்டம்பர் 2011ல் நடைபெற்ற சட்டப்
பேரவை கூட்டத்தில்¢ முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளி யிட்டார்.
அதன் படி, உறுப்பினர்களின் தொகுதிப்படி 5 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டு,
இனி எம்.எல்.ஏ.க் களின் மாத ஊதியம் சம்பளம் 55 ஆயிரமாக இருக்கும் என்றார்.
No comments:
Post a Comment