Pages

Saturday, 28 July 2012

ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு . . .

கூந்தல் என்பது அழகின் அங்கீகாரம். அதனால்தான் கூந்தல் மீதான அக்கறையும் மெனக்கெடல்களும் அதி கரிக்கிறது. தொலைக்காட் சிகளிலும், பத்திரிக்கைகளிலும் கூந்தல் வளர்ச்சித் தைலங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு ஏற்ற இயற்கை நிவாரண முறைகளை அளித்துள்ளனர் நிபுணர்கள் படியுங்களேன்.
இன்றைய காலக் கட்டத்தில் அனைவரு க்கும் இருக்கும் மிக பெரிய பிரச்சனை! கூந்தல் உதிர்வது, பெண்களுக்கும், ஆண்களுக்கும் கூந்தல் உதிர்வது மிக பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்துகிற து. இதற்கு முக்கிய காரணம் நம் உடலில் வைட்டமின் மற்றும் தாது உப்புக்கள் குறைவதே ! இந்த குறைபாடுகளால் தான் முடி உதிர்வு, பொடுகு, பூச்சிவெட்டு மற்றும் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
சத்தான உணவுகளை உட்கொண்டால் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம். புரதச்சத்து நிறைந்த காய்கறி கள் மற்றும் பழங்கள், பருப்பு மற்றும் பயறு வகைகள், பால் பொருட்கள் ஆகி யவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும் இவை முடியை நன்கு வளர வழி வகுக்கும். ரசா யனங்கள் அடங்கிய ஷாம்பு உபயோகிப்பதை விட இயற்றை பொருட்களான சிகைக்காய், எலுமிச்சை , தேங்காய் எண்ணெய், வினிகர் போ ன்றவை கூந்தலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.
 
வறண்ட கூந்தலுக்கு எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளை கரு, தேய்த்து குளித்தால் முடி பளபளப்பாக மாறும். கூந்தலுக்கு தேன் தேய்த்துக் குளித்தால் முடி உதிரும் பிரச் சனை நீங்கும். குளிக்கும் போது நீரில் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினி கர் கலந்து குளிக்கலாம் கூந்தல் மிருது வாகவும்,பளபளப்பாகவும் இருக்கும். மேலும் தேனில் பாலாடை கலந்து தேய் த்தால் மிக அழகான கூந்தல் கிடைக்கு ம்.
 
நாம் உபயோகிக்கும் ஷாம்பு அதிக ரசாயனக் கலப்பு இல்லாத மைல் டாக இருக்க வேண்டும். பொடுகு இருப்பவர் கள் ஒருநாள் விட்டு ஒரு நாள் தலைக்கு குளிக்க வேண்டும். இத னால் பொடுகு தொல்லை நீங்கும்.

No comments:

Post a Comment