Pages

Sunday, 22 January 2012

உடலுக்கு தெம்பூட்டும் பாம்பு ரத்தம்!

Posted On Jan 22,2012,By Muthukumar
தைவானில் உள்ள தைபே நகரில், "பாம்பு சந்து' என்ற பெயரில், ஒரு வர்த்தக பகுதி செயல்படுகிறது. இங்கு, பல விதமான பாம்புகளின் இறைச்சி, பல்வேறு சுவைகளில் சுடச்சுட கிடைக்கும். பாம்பு உணவின், அடுத்த பரிணாம வளர்ச்சியாக, இங்குள்ள சில கடைகளில், பாம்புகளின் ரத்தம், குளிர்பானம் போல் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த கடைகளில், ஏராளமான பாம்புகள், கண்ணாடி கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டு இருக்கும். வாடிக்கை யாளர்கள், தங்களுக்கு விருப்பமுள்ள பாம்பை காட்டினால் போதும்... அந்த பாம்பு வெளியே எடுக்கப்பட்டு, கூர்மையான ஒரு கருவியால், அதன் மீது சிறிய துவாரம் போடப்படும். அதில் இருந்து வடியும் ரத்தம், ஒரு டம்ளரில் பிடிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு, அந்த இடத்திலேயே கொடுக்கப்படும்.
பாம்பு ரத்தத்தை சுவைப்பதற்காக, குத்துச்சண்டை வீரர்கள், பேஸ்பால் வீரர்கள் போன்றவர்கள் தான், அதிக அளவில் வருகின்றனர். பாம்பு ரத்தம் குடிப்பதால், தங்கள் உடலுக்கு புத்துணர்வும், தெம்பும் கிடைப்பதாக கூறும் இவர்கள், தங்களின் தோலும், மினு மினுப்பாக மாறி விடுவதாக கூறுகின்றனர்.

No comments:

Post a Comment